புகைப்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி


புகைப்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது  விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Nov 2021 9:27 PM IST (Updated: 12 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

புகைப்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி


உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எலவனாசூர்கோட்டை அருகே புகைப்பட்டி கிராம ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பல வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் ஏரியின் மதகு வழியாக அருவிபோல வெளியேறும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.   

மேலும் புகைப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள காப்பு காடு மற்றும் வயல்வெளி பகுதிகளில் பொழியும் மழை நீர் ஏரிக்கு வரும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் 4 நாட்களுக்கு முன்பே ஏரி நிரம்பி இருக்கும் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல வருடத்திற்குப் பிறகு புகைப்பட்டி ஏரி நிரம்பி உள்ளதை தொடர்ந்து இந்த பகுதியில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்பாசனம் பெற உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story