கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2021 9:44 PM IST (Updated: 12 Nov 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தமபாளையம்:
சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கம்பம்மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மறித்தனர். அதற்குள் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு, அதனை ஓட்டிவந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது,  அதில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற அரிசி மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
பின்னர் அவற்றை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story