கடமலைக்குண்டு அருகே 2 கடைகளில் திருட்டு


கடமலைக்குண்டு அருகே 2 கடைகளில் திருட்டு
x
தினத்தந்தி 12 Nov 2021 9:55 PM IST (Updated: 12 Nov 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே 2 கடைகளில் பணம் திருடுபோனது.

கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் விருமாண்டி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு அருகில் முத்தையா என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். 
இந்தநிலையில் நேற்று காலை விருமாண்டி வழக்கம்போல் தனது கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் திருடுபோனதும் தெரியவந்தது. இதேபோல் முத்தையாவின் பலசரக்கு கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.4 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்து விருமாண்டி, முத்தையா ஆகியோர் தனித்தனியாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குமணன்தொழுவிற்கு வந்து திருட்டு நடைபெற்ற கடைகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது பலசரக்கு கடைக்குள் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடந்தது. 
இதனால் திருட வந்த மர்மநபர்கள் கடைக்குள் அமர்ந்து மது அருந்திவிட்டு, அதன்பின்னர் பணத்தை திருடி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story