பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Nov 2021 4:29 PM (Updated: 12 Nov 2021 4:29 PM)
t-max-icont-min-icon

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

உப்புக்கோட்டை:
தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு ராபி பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது. விவசாய கடன் பெற்ற, பெறாத விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே பயிர் காப்பீடு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் மேற்கண்ட 2 நாட்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story