ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
நீடாமங்கலம்:
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருப்பெயர்்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று(சனிக்கிழமை) மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சியடைகிறார்.
இதனை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. உலக நன்மை வேண்டி விநாயகர் வழிபாட்டுடன், குருபரிகார யாகம் நேற்று மாலை நடைபெற்றது.
குருபகவானுக்கு தங்ககவச அலங்காரம்
குருப்பெயர்ச்சி விழாவான இன்று அதிகாலை 2-வதுகால யாகபூஜையும், அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட உள்ளது. குருபகவானுக்கு தங்ககவச அலங்காரமும், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6.31 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு தீபாராதனை காட்டப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார்-உதவிஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர்-செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
குருப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story