ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களை கொடுத்து மின் இணைப்பு பெறலாம் செயற்பொறியாளர் தகவல்
ஏற்கனவே பதிவுசெய்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களை கொடுத்து மின் இணைப்பு பெறலாம் என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ( இயக்கமும், பராமரிப்பும்) கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய மின் இணைப்பு
கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட கள்ளக்குறிச்சி கோட்டத்தில் கடந்த 1-4-2003 முதல் 31-3-2006 வரை விவசாய மின் இணைப்பு வேண்டி சாதாரண வரிசை அடிப்படையில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க உரிய வருவாய் ஆவணங்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் அளிக்க வேண்டி 30 நாள் அறிவிப்பு கடிதம் பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1-4-2006 முதல் 31-3-2007 வரை விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு சுயநிதி திட்டம் ரூ.10,000 திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க விருப்பம் தெரிவிக்கக் கோரி அறிவிப்பு கடிதம் பதிவு தபாலில் வழங்கப்பட்டுள்ளது. சுய நிதி திட்டம் ரூ.25 ஆயிரம் திட்டத்தில் கடந்த 1-4-2007 முதல் 31-3-2012 வரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை கொடுத்து
சுய நிதி திட்டம் ரூ.50 ஆயிரம் திட்டத்தில் கடந்த 1-1-2010 முதல் 31-3-2012 வரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய மின் இணைப்பு வேண்டி மேற்கண்ட தேதிகளில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களை அணுகி தற்போதைய உரிமைச் சான்று மற்றும் வருவாய் ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை பெற பிரிவு அலுவலர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story