மழைநீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்

மழைநீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:19 PM IST (Updated: 12 Nov 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பகுதியில் மழைவிட்டும் மழைநீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீரில் வாலிபர்கள் மீன்பிடித்து வரும் அவலம் உள்ளது.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் மழைவிட்டும் மழைநீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீரில் வாலிபர்கள் மீன்பிடித்து வரும் அவலம் உள்ளது. 
தண்ணீர் வடியவில்லை
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள பிச்சன்கோட்டகம், பாமணி, கோட்டகம், ஆலிவலம், ஆண்டாங்கரை, சீராளத்தூர், கொத்தமங்கலம்,  எழிலூர், நுணாக்காடு உள்ளிட்ட 32 ஊராட்சி கிராமங்களில் 36,500 ஏக்கர் பரப்பரளவில் சம்பா, தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. திருத்துறைப்பூண்டியில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்தது. இந்த கனமழையால் 10 ஆயிரம்  ஏக்கர் தாளடி இளம்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தற்போது மழைவிட்டு 2 நாட்கள் ஆகியும்   வளவனாறு, கோரையாறு மற்றும் வடிகால் வாய்கால்களில் ஆகாய தாமரை, கோரை புற்கள் மண்டி கிடப்பதால் மழைநீர் வடியாமல் உள்ளது. 
பயிர்கள் அழுகும் அபாயம்
இதனால் மழைநீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் தாளடி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருத்துறைப்பூண்டியில் பெரும்பாலான வயல்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் தேங்கிய வயல்களில் அப்பகுதி வாலிபர்கள் தூண்டில் போட்டு மீன்பிடித்து வரும் அவலம் உள்ளது. 

Next Story