ஊசுடு ஏரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு


ஊசுடு ஏரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2021 10:32 PM IST (Updated: 12 Nov 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் நிரம்பிய ஊசுடு ஏரியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

வில்லியனூர், நவ.
தொடர் மழையால் நிரம்பிய ஊசுடு ஏரியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
ஊசுடு ஏரி
புதுச்சேரியின் முக்கிய நீராதாரமாக ஊசுடு ஏரி உள்ளது. 4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரியின் மூலம் ஊசுடு, பத்துக்கண்ணு உள்பட சுற்றுப்பகுதியில் உள்ள பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறக்கப்பட்டதால் ஊசுடு ஏரிக்கு பத்துக்கண்ணு, பிள்ளையார்குப்பம் வாய்க்கால்கள் வழியாக நீர்வரத்து அதிகரித்தது. 
இதனால் ஏரி வேகமாக நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர்மட்டம் 3.5 மீட்டராக உயர்ந்தது.  
கவர்னர் பார்வையிட்டார்
இதையடுத்து பாதுகாப்பு கருதி பத்துக்கண்ணு வாய்க்காலில் வந்த தண்ணீர் அப்படியே தடுத்து, வாய்க்காலில் திருப்பி விட முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி அமைச்சர் சாய் சரவணன் குமார் பத்துக்கண்ணு வாய்க்கால் ஷட்டரை திறந்துவைத்தார். இதையடுத்து வாய்க்காலில் வந்த தண்ணீர், ஏரிக்கு வராமல் அப்படியே திருப்பி விடப்பட்டது.
இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஊசுடு ஏரியை பார்வையிட்டு, நீர்வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

Next Story