கருமேகங்கள் வழிவிட்ட நிலையில் கடலூாில் 4 நாட்களுக்கு பிறகு தலைகாட்டிய சூரியன் ஆர்வமாக துணிகளை காயவைத்த இல்லத்தரசிகள்
கடந்த 4 நாட்களாக கடலூா் மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்து இருந்த கருமேகங்கள் வழிவிட்ட நிலையில், கடலூாில் சூரிய வெளிச்சம் நேற்று தலைகாட்டியது. வெயில் அடிக்க தொடங்கியதால், துணிகளை துவைத்து காயவைக்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டினர்.
கடலூா்,
கடலூாில் கருமேகங்கள்
கடலூாில் கடந்த 8-ந் தேதி காலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் கடலூா் மாவட்டம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.
அன்றைய நாளில் இருந்து கடலூா் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தே காணப்பட்டது. அதிலும் கடந்த 9-ந் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னை அருகே நேற்று முன்தினம் மாலையில் கரையை கடந்தது. இந்த நிகழ்வுகள் காரணமாக மீண்டும் கடலூாில் கனமழை பெய்தது.
மழை நின்றது
இதனால் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில், மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை.
தலைகாட்டிய சூரியன்
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கருமேகங்கள் விலகி வழிவிட்டன. 4 நாட்களுக்கு பிறகு கடலூா் மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் நேற்று தலைகாட்டியது.
கடந்த சில நாட்களாக பகலிலேயே இருள் சூழ்ந்திருந்த நிலையில், நேற்று வெயில் அடிக்க தொடங்கியதும் பெரும்பாலான இல்லத்தரசிகள் துணிகளை துவைத்து காயவைக்க ஆர்வம் காட்டினர். அதேபோல் சலவை தொழிலாளர்களும் சலவை பணியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. சில இடங்களில் வெள்ளநீர் வீடுகள், கடைகளுக்குள் புகுந்ததில் ஆவணங்கள், புத்தகங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டன. அவற்றை உலரவைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story