இலங்கை சிறையில் தவிக்கும் 23 மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு


இலங்கை சிறையில் தவிக்கும் 23 மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 11:14 PM IST (Updated: 12 Nov 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

23 மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடந்த மாதம் 13-ந் தேதி, நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்த போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களையும் படகுடன் கைது செய்தனர். பின்னர் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். 
23 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் தவிக்கும் 23 மீனவர்கள் நேற்று மீண்டும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 23 மீனவர்களையும் வருகிற 15-ந் தேதி வரையிலும் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் 23 மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மீனவர்களின் உறவினர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story