பொன்னை அணைக்கட்டில் இருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை


பொன்னை அணைக்கட்டில் இருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2021 11:29 PM IST (Updated: 12 Nov 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

15,000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொன்னை அணைக்கட்டுக்கு வரும் 15 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. 

எனவே மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றைக்கடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story