அரக்கோணம் பகுதியில் வெள்ளச்சேத பகுதிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
அரக்கோணம் பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ள சேதங்களை அமைச்சர் ஆர்.காந்தி ஆயவு செய்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ள சேதங்களை அமைச்சர் ஆர்.காந்தி ஆயவு செய்தார்.
மழை வெள்ளத்தால் சேதம்
அரக்கோணம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அரக்கோணத்தை அடுத்த அடுத்த பெருமூச்சி கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.
அதேபோன்று தக்கோலம் - திருவாலங்காடு ரோட்டில் கல்லாறு குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகில் தற்காலிக தார்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால், ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தார்சாலை மூழ்கி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
இதுபற்று தகவல் அறிந்ததும் அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இலுப்பை தண்டலம் கிராமத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த மாணவியின் வீட்டை பார்வையிட்டு மாணவியின் பெற்றோரிடம் தேவையான மருத்துவ உதவி செய்து தரப்படும் என்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத், மாரிமுத்து, வெங்கடேசன், தக்கோலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜன், நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சோளிங்கர்
சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பகுதியில் வசித்து வந்த 8 இருளர் இன குடும்பத்தை சேர்ந்த 36 பேர் கனமழை காரணமாக அதே பகுதியில் அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து உணவுபொருட்கள், பால், ரொட்டி, பாய், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து பாண்டியநல்லூர் பகுதியில் விவசாய நிலத்தில் மழைநீரில் முழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகுறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வேளாண்மை அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்தும் இழப்பீடு குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன். வேளாண்மை துணை இயக்குனா் வேலாயுதம், மாவட்டஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, துணைதலைவர் நாகராஜ், ஒன்றியகுழு தலைவர் கலைக்குமார், தோட்டகலை துணைஇயக்குனர் லதாமகேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தாசில்தார் வெற்றிகுமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், பாண்டியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் கல்யாணி ஆகியோர் உடன் இருந்தனா்.
Related Tags :
Next Story