ஆட்டோவில் சென்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது


ஆட்டோவில் சென்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2021 11:43 PM IST (Updated: 12 Nov 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் சென்ற மூதாட்டி பாலியல் பலாத்காரம்

கே.வி.குப்பம்
-
கே.வி.குப்பத்தை அடுத்த துருவம் பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கே.வி.குப்பம் சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு அதே (துருவம்) பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 40) என்பவருடைய ஆட்டோவில் ஊருக்கு சென்றார். வழியில் காட்டுப் பகுதியில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் மகேந்திரன் அந்த பெண்ணை மறைவான இடத்தில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளார். 

இதனால் பயந்துபோன அந்த பெண் வெளியே சொல்லாமல் இருந்துவிட்டார். இந்தநிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் மகேந்திரனை கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி கைது செய்தார்.

Next Story