காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தற்கொலை
திருச்சியில் 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மலைக்கோட்டை, நவ.13-
திருச்சியில் 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
திருச்சி இ.பி.ரோடு பூலோகநாதசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் பார்த்திபன் (வயது 22). இவர் தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று காலையில், இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
காதலை ஏற்க மறுப்பு
விசாரணையில் அவர்கள், பார்த்திபன் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் பார்த்திபனின் காதலை ஏற்க மறுத்து வந்தார். இந்நிலையில் இறுதிகட்ட முயற்சியாக மீண்டும் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். எனினும் அந்த பெண் காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதை எங்களிடம் கூறி மனம் நொந்தபடி பேசி வந்தார். இதற்கிடையில்தான் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனவே பார்த்திபன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் பார்த்திபனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story