100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2021 12:41 AM IST (Updated: 13 Nov 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

துறையூர், நவ.13-
துறையூர் அருகே கட்டாம்பட்டி பகுதியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றது. அப்போது, அங்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பணியில் இருந்த 80-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 100 நாள் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்படுகிறது. மீண்டும் 100 நாள் அடையாள அட்டையை திருப்பிக் கேட்ட போது, என் மீது 6 பேரால் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற சொல்லுங்கள், அடையாள அட்டையை தருகிறேன் என்று கூறினாராம். இதை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கட்டாம்பட்டி திருச்சி  சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் முசிறி தாசில்தார் சண்முகப்பிரியா, முசிறி ஊராட்சி ஒன்றியம் வட்டார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story