இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2021 12:47 AM IST (Updated: 13 Nov 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சக்கணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காதர் முகைதீன், சமுத்திரம், பாண்டியன், பழனிக்குமார், முத்துக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று வத்திராயிருப்பிலும் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல சேத்தூர் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, துணைச் செயலாளர்கள் பழனிகுமார், கணேசமூர்த்தி, யூனியன் கவுன்சிலர் வக்கீல் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story