பாலத்தில் சென்ற அரசு பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு-1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தென்காசியில் பாலத்தில் சென்றபோது அரசு பஸ் டயர் வெடித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் பாலத்தில் சென்றபோது அரசு பஸ் டயர் வெடித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டயர் வெடித்தது
தென்காசியில் இருந்து சுரண்டைக்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 10 மணியளவில் தென்காசி இலஞ்சி விலக்கு அருகே மேம்பாலம் தொடக்கத்தில் வந்தபோது திடீரென அந்த பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பஸ் பாலத்தில் நின்று விட்டது. டயர் வெடித்ததை அறிந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அந்த சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலை ஆகும். எனவே, அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
பின்னர் அந்த பஸ்சுக்கு வேறு டயர் பொருத்தப்பட்டு அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு அனைத்து வாகனங்களும் சென்றன. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story