தொழிற்சாலைக்குள் புகுந்த பாம்பு


தொழிற்சாலைக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 13 Nov 2021 1:08 AM IST (Updated: 13 Nov 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் தொழிற்சாலைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை காந்தி நகரில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பாம்பு புகுந்து விட்டதாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு பதுங்கியிருந்த சாரை பாம்பினை நவீன உபகரணங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Next Story