ஓடும் கார் தீப்பற்றி எரிந்தது
நெல்லையில் ஓடும் கார் தீப்பற்றி எரிந்தது. அதில் சென்ற வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நெல்லை:
நெல்லையில் ஓடும் கார் தீப்பற்றி எரிந்தது. அதில் சென்ற வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓடும் காரில் தீ
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 35). இவர் தனது காரில் நேற்று இரவு தியாகராஜநகர் 4 வழிச்சாலை பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்தார்.
குத்துகல் கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார் திடீரென்று தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரை உடனடியாக நிறுத்தி, கீழே இறங்கி உயிர் தப்பினார்.
சேதம்
இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் காரில் தீப்பற்றி எரிந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story