விற்பனைக்காக பதுக்கப்பட்ட 91 மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது


விற்பனைக்காக பதுக்கப்பட்ட 91 மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது
x
தினத்தந்தி 13 Nov 2021 1:22 AM IST (Updated: 13 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

விற்பனைக்காக பதுக்கப்பட்ட 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணை கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

மது விற்பனை
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையின் பின்புறம் தோப்பேரித் தெருவில் மது விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, பெண் ஒருவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
பெண் கைது
இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் அதே தெருவைச் சேர்ந்த கணேசனின் மனைவி விஜயா (வயது 50) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story