சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தாமரைக்குளம்:
பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியநாதன். இவருடைய மகன் அன்பு(வயது 23). இவர், 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 14.11.2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது.
10 ஆண்டுகள் சிறை
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை கற்பழித்ததற்காக அன்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், திருமணம் செய்வதாக ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து, அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அன்புவை திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story