சிறுமியை கட்டி வைத்து தாக்கிய கணவன்-மனைவி கைது
சிறுமியை கட்டி வைத்து தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்
கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் செல்போனை திருடி விட்டதாக கூறி அவரை மரத்தில் கட்டி வைத்து ஒரு கும்பல் சரமாரியாக அடித்தது. இதுகுறித்த தகவலின்பேரில் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து குளமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி, சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஞானமணி அவரது மனைவி மலர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் மீது கீரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து ஞானமணி, மலர் ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story