தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையை சீரமைக்க வேண்டும்
புன்னை நகரில் இருந்து ஹோலிகிராஸ் செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ரூக் ஜெசிக்கா, இளங்கடை.
விபத்து அபாயம்
வெட்டூர்ணிமடத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் அருகில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வேகமாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைகோகுமார்,கிருஷ்ணன்கோவில்.
சேதமடைந்த மின்கம்பம்
வல்லன்குமாரன்விளை மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட சரக்கல்விளையில் ரேஷன்கடை தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பம் எண் 565 சேதமடைந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராமகிருஷ்ணன்,
சரக்கல்விளை.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகவதிபுரம் கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், குளம் நிரம்பி வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுகால் ஓடையில் ஆக்கிரமிப்புகள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துவேல் பாண்டியன், வடக்கு பகவதிபுரம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
பார்வதிபுரத்தில் இருந்து பெருவிளை, பள்ளிவிளை, மேலபெருவிளை வழியாக ஆசாரிபள்ளம் செல்லும் பாசனகால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உள்ள குப்பைகள், கழிவுகளை சுத்தம் செய்து அதன் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளது. மேலும், பாதையோரத்தில் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள், செடிகளை அகற்றி பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அருள் சபிதா ரெக்ஸலின்,
மேலபெருவிளை.
படித்துறை தேவை
பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு செறுகடை பகுதியில் சுமார் 280 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள வள்ளியாற்றில் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றின் கரையில் படித்துறை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பின்றி சென்று வருகின்றனர். மக்கள் நலன் கருதி ஆற்றின் கரையில் படித்துறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீலன், செறுகடை.
சுகாதார சீர்கேடு
ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட இரணியல் கோர்ட்டு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு முறையாக அகற்றாமல் காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்லா, குளச்சல்.
Related Tags :
Next Story