கர்நாடகத்தில் அரசு பஸ்களில், செல்போனில் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்க தடை


கர்நாடகத்தில் அரசு பஸ்களில், செல்போனில் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்க தடை
x
தினத்தந்தி 13 Nov 2021 3:06 AM IST (Updated: 13 Nov 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு புறநகர் பஸ்களில் செல்போனில் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்க தடை விதித்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பயணிகளுக்கு இடையூறு

  பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தொலைதூர பஸ்களில் பயணிப்பவர்கள், தங்களிடம் உள்ள செல்போனில் படம் பார்ப்பது, சினிமா பாடல்களை கேட்பது, செய்திகளை பார்ப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் வீடியோக்களை பார்க்கும்போது, அதிக ஒலியை வைக்கிறார்கள்.

  இதன் மூலம் ஒலி மாசு உண்டாவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புறநகர் பஸ்களில் செல்போனில் அதிக ஒலியுடன் சினிமா பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது போன்றவற்றிற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கீழே இறக்கிவிட வேண்டும்

  கர்நாடகத்தில் புறநகர் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தங்களின் செல்போனில் அதிக ஒலியை வைத்து சினிமா பார்ப்பது, செய்திகளை பார்ப்பது, பாடல்களை கேட்பதாகவும், அதனால் ஒலி மாசு ஏற்பட்டு சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதன் காரணமாக பயணிகள் தங்களின் செல்போன்களில் அதிக ஒலியை வைத்து சினிமா பாடல்கள் உள்பட எந்த வகையான காட்சிகளையும் பார்க்க தடை விதிக்கப்படுகிறது.

  அவ்வாறு யாராவது அதிக ஒலியுடன் சினமா பாடல்களை கேட்பது தெரியவந்தால், உடனடியாக நடத்துனர், அந்த பயணியிடம் சென்று இதுகுறித்து எடுத்துக்கூற வேண்டும். அதை கேட்காவிட்டால் அந்த பயணியை பஸ்சை நிறுத்தி கீழே இறக்கிவிட வேண்டும். அவர் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story