மாரண்டஅள்ளி அருகே போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது 3ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்
மாரண்டஅள்ளி அருகே போலீசாரின் அதிரடி சோதனையில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி:
மாரண்டஅள்ளி அருகே போலீசாரின் அதிரடி சோதனையில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி சோதனை
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆத்துமேடு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் மாரண்டஅள்ளி போலீசார் ஆத்துமேடு கிராமத்தில் அகரம் ரோட்டில் உள்ள போயர் கொட்டாய் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போலி மதுபான தொழிற்சாலை நடத்துவது தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் அங்கு சாராயம் தயாரித்து அதற்கு கலர் கலந்து அதனை மது பாட்டில்களில் நிரப்பி போலி மதுபான தொழிற்சாலையின் ஸ்டிக்கர்கள் ஒட்டி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்த சுந்தரராஜன் (வயது 45), இவரது மனைவி முத்துமணி (37), இவர்களது வளர்ப்பு மகன் ஷேக் பாண்டியன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள், சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரண்டஅள்ளியில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story