திருமணம் செய்துகொள்ள பணம் இல்லாததால் விரக்தி: டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் செய்துகொள்ள பணம் இல்லாததால் விரக்தி: டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2021 10:33 AM IST (Updated: 13 Nov 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்ள பணம் இல்லாததால் விரக்தியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் ராஜா (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் ராஜா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் ராஜாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

‘திருமணம் செய்து கொள்ள பணம் இல்லாததால், விரக்தியின் உச்சத்தில் இருந்த ராஜா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக’ போலீசார் தெரிவித்தனர்.

Next Story