எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பிறந்தன
சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் 68 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-
சென்னை,
எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டில், இதேபோல் ஒரே நாளில் நடந்த பிரசவங்களில் 64 குழந்தைகள் பிறந்தது. அதேபோல், நேற்று முன்தினம் அதிகாலை 12 மணி முதல் நேற்று அதிகாலை 12 மணி வரை நடைபெற்ற பிரசவங்களில் 68 குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் 39 ஆண் குழந்தைகள், 29 பெண்கள் அடங்கும். சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர் ஆஸ்பத்திரிகளில் மழை நீர் தேங்கியதால், அங்கிருந்து பலர் எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது, 68 குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story