பழைய வத்தலக்குண்டுவில் குறுகிய சாலையால் போக்குவரத்து நெருக்கடி


பழைய வத்தலக்குண்டுவில் குறுகிய சாலையால் போக்குவரத்து நெருக்கடி
x
தினத்தந்தி 13 Nov 2021 5:25 PM IST (Updated: 13 Nov 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

பழைய வத்தலக்குண்டுவில் குறுகிய சாலையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு உள்ளது. இங்குள்ள சாலை ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் 500 மீட்டர் தூரம் குறுகிய அளவில் உள்ளது.. அதை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இருபுறமும் வீடுகள் உள்ளன. இதனால் 2 வாகனங்கள் குறுகிய சாலையில் நடுவில் சந்திக்கும்போது ஏதாவது ஒரு வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி (ரிவர்ஸ்) எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தாமதம் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். அதேபோல வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 
எனவே பழைய வத்தலக்குண்டுவில் குறுகிய சாலையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஆண்டிப்பட்டியில் இருந்து வரும் வாகனங்களை இப்போது உள்ள சாலையிலும், வத்தலக்குண்டுவில் இருந்து புறப்பட்டு விராலிப்பட்டி செல்லும் வாகனங்களை கோட்டைப்பட்டி சாலை வழியாக செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Next Story