பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 13 Nov 2021 7:36 PM IST (Updated: 13 Nov 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

கோவை

1969 முதல் 2018-ம் ஆண்டு வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டு உள்ளதால் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இணை பதிவாளர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

பிறப்பு, இறப்பு பதிவு குறித்து வருவாய், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

இதற்கு தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் மற்றும் பிறப்பு, இறப்பு பதிவிற்கான இணைப்பதிவாளர் தேவசேனாதிபதி தலைமை தாங்கி பேசியதாவது

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

கொரோனா தொற்று பாதித்தவர் கள், தற்கொலை, விபத்து உள்ளிட்ட இதர காரணங்களால் உயிரிழந் தால் அதை கொரோனா தொற்றாக ஏற்க முடியாது.

கொரோனா சான்றிதழ்

கொரோனா தொற்று உறுதியாகி குணமாகாமல் வீட்டிலோ, மருத்துவ மனையிலோ 30 நாட்களுக்குள் உயிரிழக்க நேரிட்டால் கொரோனா தொற்றால் இறப்பு என சான்றிதழ் வழங்கப்படும். 

கொரோனா இறப்பை உறுதி செய்யும் குழு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரின் தலைமையில் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 

எனவே நோயால் உயிரிழந்ததற்கான ஆவணங்கள் இருப்பின், அதை குழுவின் முன் சமர்ப்பித்து சான்று பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ் பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம்.

இலவசமாக பதிவிறக்கம்

1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் ரூ.75 லட்சம் செலவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 இதன் மூலம் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையவழி மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story