திண்டுக்கல் மாவட்டத்தில் 1,215 இடங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்


திண்டுக்கல் மாவட்டத்தில் 1,215 இடங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 13 Nov 2021 8:42 PM IST (Updated: 13 Nov 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,215 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இறந்தவர்களின் பெயரை நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைவுபெறும் நபர்கள் அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம் நடத்தும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மட்டுமின்றி நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் முகாமுக்கு வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் வந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்தனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.
வத்தலக்குண்டு, 1-வது வார்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்த முகாம் நடந்தது. வாக்காளர் பதிவு அதிகாரிகள் வசந்தா, அழகரம்மாள் ஆகியோர் புதிய வாக்காளர்களை பதிவு செய்தனர். முகாமில் தலைமை ஆசிரியை சுந்தரி, தி.மு.க. நகர செயலாளர் சின்னதுரை மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் குமரவேல், அமுத வேல், குட்டி என்ற ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story