அவினாசிலிங்கேசுவரர் கோவில் குருபெயர்ச்சி


அவினாசிலிங்கேசுவரர் கோவில்  குருபெயர்ச்சி
x
தினத்தந்தி 13 Nov 2021 9:26 PM IST (Updated: 13 Nov 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

அவினாசிலிங்கேசுவரர் கோவில் குருபெயர்ச்சி

அவினாசி, 
அவினாசி, சேவூரில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குரு பெயர்ச்சி 
 ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை  குருபகவானுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
 இதில் அவினாசி, பூண்டி, திருப்பூர், கருவலூர், தெக்கலூர், பழங்கரை, நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சக்தி விநாயகர் கோவில்
சேவூர் கோபி மெயின் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.  குருபகவான் நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்பட 32 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து குருபகவான் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் குரு பெயர்ச்சி மாறும் நேரத்தில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. இதில் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

Next Story