குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
குருப்பெயர்ச்சியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி:
குருப்பெயர்ச்சியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
குருப்பெயர்ச்சி
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு இடம் பெயர்ந்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருவுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்ற நிலையில், மாலை, 5.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
சித்தி விநாயகர், கவீஸ்வரர் கோவில்
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு, 58 லிட்டர் பால் அபிஷேகமும், 58 மஞ்சள்களால் அபிஷேகமும் செய்யப்பட்டது. ராசுவீதி சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல கவீஸ்வரர் கோவில், புதுப்பேட்டை சோமேஸ்வரர் கோவில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் மற்றும் பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story