மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்


மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 13 Nov 2021 9:57 PM IST (Updated: 13 Nov 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

ராமேசுவரம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து டோக்கன் அலுவலகத்தில் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் மண்டபத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதுபோல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களில் நாட்டுப்படகு மீனவர்களும் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

Next Story