கோவில்களில் சிறப்பு யாக பூஜை


கோவில்களில் சிறப்பு யாக பூஜை
x
தினத்தந்தி 13 Nov 2021 9:59 PM IST (Updated: 13 Nov 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

குருபெயர்ச்சியை முன்னிட்டு ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு யாக பூஜை நடந்தது

ராமேசுவரம்
குருபெயர்ச்சியை முன்னிட்டு ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு யாக பூஜை நடந்தது.
சிறப்பு யாக பூஜைகள்
நவக்கிரகங்களில் முக்கிய கடவுளான குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை.621-க்கு பெயர்ச்சியானார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நேற்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. புனிதநீர் அடங்கிய பெரிய கலசம் வைக்கப்பட்டு அதற்கு முன்பாக யாக குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த யாக பூஜையின் போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை தெரிவித்து அர்ச்சனையும் செய்து வழிபாடு நடத்தினர். 
இதைதொடர்ந்து கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு புனித தீர்த்தம், பால் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளை கோவிலின் மனோகர குருக்கள், ரமேஷ் குருக்கள் ஆகியோர் செய்தனர். சிறப்பு பூஜையில் திவான் பழனிவேல்பாண்டியன், செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூைஜ
இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் முதல் பிரகாரத்தில் உள்ள குரு பகவானான தட்சிணாமூர்த்திக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதுபோல் கோவிலில் உள்ள நவகிரகத்தையும் நேற்று ஏராளமான பக்தர்கள் சுற்றி வழிபாடு நடத்தினர்.
திருஉத்திரகோசமங்கை, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Next Story