சங்கராபுரம் ஊராட்சியில் ஆர்.டி.ஓ. ஆய்வு
சங்கராபுரம் ஊராட்சியில் ஆர்.டி.ஓ. ஆய்வு நடத்தினார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரம் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவி உள்ளதா? இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார மேம்பாட்டுப்பணிகள் குறித்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் வசிப்போரிடம் குறைகளை கேட்டதோடு சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வலியுறுத்தினார்.ஆய்வின்போது காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், சாக்கோட்டை யூனியன் ஆணையாளர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story