தியாகதுருகம் அருகே தொடர் மழையால் 2 பசு மாடுகள் செத்தன


தியாகதுருகம் அருகே தொடர் மழையால் 2 பசு மாடுகள் செத்தன
x
தினத்தந்தி 13 Nov 2021 10:53 PM IST (Updated: 13 Nov 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே தொடர் மழையால் 2 பசு மாடுகள் செத்தன

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் மனைவி ஜெயா(வயது 53). விவசாயியான இவர் தான் வளர்த்து வந்த 2 பசுமாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு  இரவு கன்று குட்டிகளை தனது வீட்டிலும், பசுமாடுகளை வீட்டின் அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டி போட்டார். 

பின்னர் நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது 2 பசு மாடுகளும்  செத்து கிடந்ததை பார்த்து ஜெயா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து ஒகையூர் கால்நடை மருத்துவர் பெரியசாமி (பொறுப்பு) தலைமையில் கால்நடை ஆய்வாளர் தேவநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்  செத்த பசுமாடுகளை பார்வையிட்டனர். தொடர் மழையின் காரணமாக அவை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Next Story