உதவி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை


உதவி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Nov 2021 10:54 PM IST (Updated: 13 Nov 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எட்டயபுரம் ரோடு கால்நடை மருந்தகம் ஆட்டோ நிறுத்த சங்க தலைவர் செல்வக்குமார் தலைமையில் செயலாளர் மாடசாமி, பொருளாளர் கருப்பசாமி, பா.ஜனதா கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களுடன் வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவர்கள் ஆட்டோ நிறுத்தம் இடமாற்றத்தை கண்டித்து, தங்களது ஆட்டோக்களின் சாவிகளை ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர்.

உதவி கலெக்டரிடம் மனு

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு கால்நடை மருந்தகம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. அங்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அருகே ஜோதிநகர் செல்லும் வழியில் சாலையின் வலதுபுறமாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி, ஆட்டோக்களை இயக்கி வருகிறோம். தற்போது சாலையின் இடதுபுறமாக ஆட்டோக்களை நிறுத்துமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆட்டோக்களை நிறுத்த சொல்லும் பகுதியின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின் வயர்கள் செல்கின்றன. இந்த வயர்களில் இருந்து அடிக்கடி தீப்பொறிகள் விழுகின்றன. அதன் கீழ் ஆட்டோக்களை நிறுத்தினால் தீப்பிடித்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் சாலையின் வலதுபுறமே ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story