உடன்குடியில் பஜார் வீதி, தெருக்களில் தேங்கிய மழைநீர்- பொதுமக்கள் அவதி


உடன்குடியில் பஜார் வீதி, தெருக்களில் தேங்கிய மழைநீர்- பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Nov 2021 11:02 PM IST (Updated: 13 Nov 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பஜார் வீதி, தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

உடன்குடி:
உடன்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பஜார் வீதி, தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பரவலாக மழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் கடலோர பகுதியான உடன்குடி மற்றும் கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, மாதவன்குறிச்சி, பெரியபுரம், தாண்டவன்காடு, சிறுநாடார் குடியிருப்பு, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, உதிரமாடன் குடியிருப்பு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், தாங்கையூர், கந்தபுரம், நேசபுரம், சீர்காட்சி, நயினார் பத்து, நயினார்புரம், வெள்ளாளன்விளை, சீயோன்நகர், மாநாடு, அத்தியடிதட்டு, செட்டிவிளை, வட்டன்விளை, வாத்தியார் குடியிருப்பு, வேப்பங்காடு, லட்சுமிபுரம் ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. நேற்று பகலிலும் மழை தூறியது.

பொதுமக்கள் அவதி

இதனால் ஆங்காங்கே பஜார் வீதிகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது. உடன்குடி நகரப்பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இருப்பினும் சில இடங்களில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி அடைந்தனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் நகரிலுள்ள 15 வார்டுகளில் கழிவுநீர் செல்ல வாறுகால்கள் உள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் சில இடங்களில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாறுகால் முழுவதும் மழைநீர் நிரம்பி தேங்கி கிடக்கிறது. நாசரேத் ரோடு, இட்டமொழி ரோடு, முதலூர் ரோடு உள்ளிட்ட மெயின் பஜாரில் உள்ள வாறுகால்களில் மழைநீர் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
இதேபோல் தெருக்களில் உள்ள வாறுகால்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story