கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
சாத்தான்குளம் அருகே கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே கிராம மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணறு கிராமத்தில் அதிக மின் பழு காரணமாக மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள், மின்வாரியத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மின்தடை தொடர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை பன்னம்பாறை - சாத்தான்குளம் செல்லும் சாலையை மறித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, போலீஸ் இனஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்சாம்ராஜ், விஜயகுமார், மின்வாரிய உதவி பொறியாளர் எட்வர்ட், பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் ஆகியோர் வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வருகிற 15-ந் தேதி (நாளை) மின் பராமரிப்பு பணி நடப்பதையொட்டி இப்பகுதியில் மின் குறைபாடு சீர் செய்யப்பட்டு முறையான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story