வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம்
காளையார்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் நடந்தது.
காளையார்கோவில்,
1.1.2022-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் முகவரி மாற்றுதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் காளையார்கோவில் தாலுகாவில் 108 இடங்களில் நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடங்களை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று நடைபெற்ற முகாமில் புதிதாக பெயர் சேர்க்க 157 பேரும், நீக்குவதற்கு 12 பேரும், திருத்தம் செய்வதற்கு 45 பேரும், முகவரி மாற்றத்திற்கு 15 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story