அறந்தாங்கி அருகே குளம் நிரம்பி உபரிநீர் சாலை வழியாக வெளியேறுகிறது
அறந்தாங்கி அருகே குளம் நிரம்பி உபரிநீர் சாலை வழியாக வெளியேறுகிறது.
அறந்தாங்கி:
குளம் நிரம்பியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் பல இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்தது. அறந்தாங்கி வட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பி விட்டன. ஒரு சில குளங்களில் மட்டும் வரத்து வாரி சரியாக இல்லாததால் குளம் நிரம்பவில்லை.
அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் பெருமளவு முழு கொள்ளளவை எட்டும் வகையில் வந்தன. ஆங்காங்கே உள்ள குளங்களில் தண்ணீர் பரந்து விரிந்து காணப்படுவதை காணமுடியும்.
உபரிநீர் வெளியேறுகிறது
இந்த நிலையில் அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. மேலும் உபரிநீர் சாலை வழியாக வெளியேறி மறுபுறம் குளத்திற்கு பாய்ந்து செல்கிறது. குளத்தின் மறுபுறமும் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சாலையில் தண்ணீர் பாய்ந்தோடுவதை கடந்து பொதுமக்கள் செல்கின்றனர்.
குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும் இடத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். பிள்ளைவயலில் உள்ள குளம் பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அறந்தாங்கி பகுதியில் பரவலான மழையினால் சம்பா நெல் சாகுபடியும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story