பெரிய ஏரி நிரம்பியது


பெரிய ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 13 Nov 2021 11:59 PM IST (Updated: 13 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பியது

திருப்பத்தூர்

10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பியது 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியே வருகிறது. 

திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் ஏரி, மாடப்பள்ளி ஏரி, அண்ணாண்டப்பட்டி ஏரி, புதுக்கோட்டை ஏரி ஆகிய 4 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் மாவட்டத்தின் பெரிய ஏரியாக உள்ள திருப்பத்தூர் ஏரிக்கு வருகிறது.

 இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story