பொன்னேரி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்


பொன்னேரி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 14 Nov 2021 12:05 AM IST (Updated: 14 Nov 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிரே ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பால் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக 15 ஏக்கர் பரப்பளவிற்கு உள்ள நிலங்கள் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்தது. 

தற்போது வடகிழக்கு பருவமழையால் சுமார் 15 ஏக்கருக்கும் மேலாக விளை நிலங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் நின்றது. 

இதில் பயிர்கள் மழைநீரில் நனைந்து சேதமானது. இதனால் வேதனைக்கு உள்ளான விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த தனிநபரை தட்டிக் கேட்டுள்ளனர்.

 இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் நந்தினிஅருள், துணைத்தலைவர் அரவிந்தன், கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தனிநபரின் இடத்திலிருந்து சுமார்3 அடி அகலத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் எடுக்கப்பட்டு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இதனால் பொன்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 15 ஏக்கர் பரப்பில் நிலத்தில் தேங்கியிருக்கும் மழைநீர் அகற்றப்பட்டது. 

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டு கால்வாய் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story