தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 14 Nov 2021 12:11 AM IST (Updated: 14 Nov 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்சாதன பழுதால் குழந்தைகள் அவதி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே  அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் 5 மாதங்களாக மின் சாதனம் பழுதடைந்து மின்சாரம் இல்லாமல் செயல்படுகிறது. இதுவரை அங்கன்வாடி மையத்துக்கு மின் வசதி ஏற்படுத்தித்தரவில்லை. இதனால் குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நாட்டார்மங்கலம், பெரம்பலூர். 

குளம்போல் காட்சி அளிக்கும் சாலை 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் வரத்து வாய்க்கால்கள்  தூர் வாரப்படாததால் மழை பெய்யும்போது இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மணிகண்டன், நாயகனைப்பிரியாள், அரியலூர். 
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கீரணூர் ஜெய்ஹிந்த் நகரில் வடிகால் வசதி இன்றி மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெய்ஹிந்த் நகர், புதுக்கோட்டை. 

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கல்பாலயம் அருகே உள்ள நானகமங்கல சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நானகமங்கல சத்திரம், திருச்சி. 
இதேபோல் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் பேரூராட்சி கணேசபுரம் கிராமம் 10-வது வார்டு ரேஷன் கடை மேற்கு மின் கம்பம் மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வினியோகத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் அப்பகுதியில் மின்தடையும், உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கணேசபுரம், கரூர். 

எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி 
 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டப்பாடி ஊராட்சியை சேர்ந்த பாலையூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் கிராமமே இருளில் மூழ்கி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போதும் இந்த தெரு விளக்குகள் சீரமைக்கப்பட வில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சின்னசாமி, பாலையூர், பெரம்பலூர். 

கேட்பாரற்று கிடக்கும் பேட்டரி வண்டிகள் 
திருச்சி பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் பல லட்சம் மதிப்புள்ள 8 பேட்டரி வண்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக கேட்பாரற்று அய்யன் வாய்க்கால் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இவை பழுதடைவதற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர் 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வெண்மான்கொண்டான் என்ற ஊரில் தேசிய நெடுஞ்சாலை பணிமுடிந்து வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ஊரின் பெயர் வேண்மான்கொண்டான் என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் விலாசம் தேடி வருபவர்கள் குழப்பம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரமேஷ், வடகடல், அரியலூர். 

சேறும், சகதியுமான சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், குன்னம் சட்டமன்றத்தொகுதி நொச்சிக்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் செல்லும் பாதைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பாதை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலையாக போடப்பட்டது. தற்போது வரை முழுமையாக தார்சாலை போடாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நொச்சிக்குளம், பெரம்பலூர். 

தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம்,  6-வது  வார்டு தேவதானத்தில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லவும், சைக்கிளில் செல்லவும் அவதிப்பட்டு வருகின்றனர்.  இரவு நேரம் விஷ ஜந்துகள் சாலையில் நடமாடுவதினால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், தேவதானம், திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை 
தொட்டியம் வாணப்பட்டறையில் இருந்து  சிவன் கோவில் வழியாக அரங்கூர் செல்லும் தார் சாலையில் தொடர் மழை காரணமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாணப்பட்டறையில் இருந்து  சிவன்கோவில் வழியாக மதுரைகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலையின் இருபுறமும் பழுதடைந்து நடுவில் மட்டும் கொஞ்சம் பாதை உள்ளது. அதை ஒத்தையடிப்பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, அம்மன்குடி, கொளக்குடி, அரியணாம்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு இந்த சாலையின் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாணப்பட்டறை, திருச்சி. 

நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி  குண்டூர் அய்யனார் நகர் 2 மற்றும் 3வது தெருவில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் வாகனங்கள் செல்லும்போது திடீரென குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது நாய்கள் கடிக்க வருவதுபோல் பயமுறுத்துவதினால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அய்யனார் நகர், திருச்சி. 

வடிகால் வசதி வேண்டும் 
திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணாநகரில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வடிய வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கெள்கிறோம். 
பொதுமக்கள், அண்ணாநகர், திருச்சி. 
இதேபோல் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரில் வடிகால் வசதி இன்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கண்மணி, உறையூர், திருச்சி. 

தீ விபத்து ஏற்பட வாய்ப்பு 
திருச்சி சப் ஜெயில் ரோடு சந்து நியர் காயிதே மில்லத் சாலையோரத்தில் உள்ள மின்மாற்றியின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மின்மாற்றி அருகே கொட்டப்பட்டுள்ளதால் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும்  அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சப் ஜெயில் ரோடு, திருச்சி. 

குரங்குகளால் தொல்லை
திருச்சி மாவட்டம், மருங்காபுரி கிராமம் பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றி திரிகிறது. இவை அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள்,  தின்பண்டங்களை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் பொதுமக்களையும், குழந்தைகளையும் குரங்குகள் அச்சப்படுத்துவதுடன் பழவகை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருங்காபுரி, திருச்சி. 

குடிநீர் குழாயில் உடைப்பு 
திருச்சி மாவட்டம், 7-வது வார்டு வடக்கு உக்கடை  அரியமங்கலம் பகுதியில் பள்ளிவாசல் பின்புறம் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர்  வீணாகி 5 தெருக்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவே மழை பெய்து மழை நீரும், கழிவு நீரும் ஒன்றாக கலந்துள்ளது. 3 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி   கழிவுநீரில் கலந்து தெருக்களே மிக மோசமாக உள்ளது. மழை நீரும், கழிவு நீரும், குடிநீரும்  ஒன்றாக கலந்து சில வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 சையது முஸ்தபா, அரியமங்கலம், திருச்சி.


Next Story