தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை


தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Nov 2021 12:36 AM IST (Updated: 14 Nov 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளையடித்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர், 
தி.மு.க. பிரமுகர்
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல்ராஜன் (வயது 39), விவசாயி. தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.
இந்தநிலையில் அவருக்கு சொந்தமான அருகில் உள்ள மற்றொரு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
8 பவுன் நகை கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் ராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story