மாவட்ட செய்திகள்

வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது + "||" + Attack

வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது

வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது
குளித்தலை அருகே வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி புற்றுக் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு யோகேஷ், அவரது சகோதரர் கோபி மற்றும் உறவினர் யுவராஜ் (வயது22) ஆகிய 3 பேரும் மாரியாயி மகன் ரஞ்சித் (25) என்பவரை தகாத வார்த்தைகளை கூறி கட்டையால் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த ரஞ்சித் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுமேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரஞ்சித்தின் சகோதரர் சூர்யா (29) அளித்த புகாரின் பேரில் யுவராஜ், யோகேஷ், கோபி ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது
அரவக்குறிச்சி அருகே பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்குதல்
வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்கம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3. விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
5. மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.