‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மழைநீர் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. பின்னர் அரசு அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு வந்தனர்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நேற்று மழைநீர் அகற்றப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் சரள் மண் நிரப்பி பள்ளி வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
Related Tags :
Next Story