மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை


மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 12:56 AM IST (Updated: 14 Nov 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 44). விவசாயி. இவருடைய மனைவி செல்வக்கனி. இவர்களுடைய மகள் கலையரசி (12) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் முருகானந்தம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக செல்வக்கனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனாலும் மனமுடைந்த முருகானந்தம் சம்பவத்தன்று தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story