கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 14 Nov 2021 1:01 AM IST (Updated: 14 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆபத்தான பயணம் 
கொரோனா தொற்று குறைந்ததால் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. ராஜபாளையத்தில் உள்ள கல்லூரிக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் எண்ணற்ற மாணவர்கள் வந்து செல்கின்றனர். 
இவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு வசதியாக போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சில மாணவர்கள் ஆட்டோவில் கல்லூரிக்கு வருகின்றனர். ஒரு ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.  
போக்குவரத்து விதி 
இவ்வாறு மாணவர்களை ஏற்றி செல்லும் போது ஒரு சில ஆட்டோக்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டி போட்டு கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோ ஓட்டுகின்றனர். 
இதனால் அந்த வழியாக செல்பவர்கள் விபத்து எதுவும் நிகழ்ந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாைல நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story