கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2021 1:12 AM IST (Updated: 14 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சண்முகாபுரம், கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த உதயநேரி கட்டளை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பகவதி ராஜா (வயது 21), முப்புடாதி (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story